வழமைக்கு திரும்பியது கழிவு அகற்றும் பணிகள்!

Wednesday, September 13th, 2017

நாடு முழுவதிலும் கழிவுப்பொருட்களை அகற்றும் பணிகள் வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய திண்மக்கழிவு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டி.இலங்க சிங்க தெரிவித்துள்ளார்.

திண்மக்கழிவுகளை வகைப்படுத்தி அகற்று வதற்கு பொதுமக்களும் உள்ளுராட்சி மன்றங்களும் ஊக்குவிக்கப்பட்டுவருகின்றன.

கழிவுப்பொருட்களை சேதனப்பசளையாக மாற்றியமைக்கும் திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. காணிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளில் கூட்டுத்தாபனம் முக்கியத்துவம் வழங்கி செயல்படுகின்றது.

கரவலப்பிட்டியில் தற்பொழுது சேதனைப்பசளை தயாரிப்பு நிலையம் செயற்பட்டு வருகின்றது. அங்கு மற்றுமொரு மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டிட நிர்மாணப்பணிகள் இவ்வருடத்தில் நிறைவடையவுள்ளது. இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் நாளாந்தம் 50 மெற்றிக்தொன் கழிவுப்பொருட்களை கொண்டு சேதனைப்பசளை தயாரிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts: