வழமையான மின்சார தடை – யாழ் மாநகரின் நிர்வாக அசமந்தத்தால் மாதாந்த சபை அமர்வு இடை நிறுத்தம் – குழப்பத்தில் உறுப்பினர்கள்!

Friday, March 25th, 2022

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் வழமையான மின்சார தடையால் யாழ் மாநகரசபையின் முன்னேற்பாடுகளுடன் கூடிய திட்டமிடலற்ற நிர்வாக செயற்பாடு காரணமாக இன்றையதினம் நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்வு இடை நடுவே நிறுத்தப்பட்ட சம்பவமொன்ற பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் என பொதுமக்கள் பாவனை அதிகார சபையினரது அனுமதியுடன் இலங்கை மின்சார சபை துண்டிப்பு நடைபெறும் என வகுக்கப்பட்ட அட்டவணையை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே சபை அமர்வுக்கான திகதி குறித்தொதுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் யாழ் மாநகரசபையின் இம் மாதத்திற்கான அமர்வு முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

சபை அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வழமைபோன்று மின்சார தடை ஏற்பட்டமையால் ஜெனரேற்றர் மூலம் அமர்வை சிறிது நேரம் முன்னொண்டு செல்லப்பட்டது. ஆனால் மதியம் 12 மணியளவில் டிசல் பொதாது என கூறி சபை அமர்வு மீண்டும் மின்சாரம் வரும்வரை இடைநிறுத்தப்பட்டது.

மின்சார தடை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான மாற்று பொறிமுறையை ஏற்படுத்தாது சபை அமர்வை இன்றையதினம் அடைநிறுத்தப்பட்டமையானது சபையின் நிர்வாக செயற்பாட்டின் அசமந்தமும் அக்கறையீனமுமே காரணமென அவதானிக்க முடிந்தது.

இதேநேரம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் பல காணப்படும் நிலையில் இன்றைய மாநகரின் அமர்வு ஆரம்பித்த நேரத்திலிருந்து மதியம் வரை கடந்த மாத அறிக்கைகளின் குறைநிறைகளெ ஆராயப்டபட்டது.

இவ்வாறு ஒவ்வொரு தடவையும் சபையை கூட்டி அக்கூட்டத்தின் முந்தைய கூட்ட அறிக்கையை ஆராய்வதிலேயே சபையின் காலம் அதிகமாக செலவிடப்பட்டு வருகின்றது. இத்தகைய நிலை காணப்படுவதால் மக்களின் தேவைப்பாடுகள் அனைத்தும் மந்த கதியிலேயே அல்லது கிடப்பிலேயே இருக்கும் பரிதாப நிலையும் மாநகர பிரதேசத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில் வீதி விளக்குகளை இம்மாதம் 31 ஆம் திகதிவரை நிறுத்தி மின்சாரத்தை சேமித்குமாறு மின்சார சபை அறிவித்திருந்தது.

இதனடிப்படையில் யாழ் மாநகரின் பிரதான வீதிகளில் காணப்பட்ட அதிகளவான மின்சார விளக்குகள் ஒளிர்வது செயலிக்கச் செய்யப்பட்டன.

ஆனபோதும் அவசயமாக கருதும் இடங்களில் மின் விளக்ககளை ஒளிரவிட வேண்டுமென சபையில் உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் இரா செலவவடிவேல் கூறுகையில் –

அவசியமான சந்திகள் மற்றும் அபாயகரமான விழைவுகளை ஏற்படுத்தும் இடங்கள்  என அடையாளம் காணப்பட்ட இடங்கள். மற்றும் உள் வீதிகளில் மின் விளக்குகள் குறைந்தளவிலாவது ஒளிரவிடப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேநேரம் குறித் மின்விளக்ககள் ஒளிராது செயலிழக்கச் செய்யப்பட்டதால் சில இடங்களில் களவுகள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவது அதிகரித்துள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய அடையாளம் காணப்பட்ட இடங்களில் மின்குமிழை ஒளிரவிடுவதென நபையில் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: