பண்டிகை காலத்தால் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் – பொலிஸாருக்கு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் அவசர உத்தரவு!
Wednesday, December 22nd, 2021
கொழும்பு மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரட்னவுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கருத்திற்கொண்டே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
இதேவேளை அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், குற்றவாளிகளை கைது செய்வதற்கு சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் அந்தந்தப் பகுதிகளில் மொபைல் மற்றும் வாகன ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும் பொலிஸ்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்வரும் 13 மற்றும் 14 அம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் வெப்பம் உச்சம்பெறும்! - வளிமண்டலவியல் திணைக்...
ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
இங்கிலாந்து பிரதமர் விரைவில் குணமடைய வேண்டும் - பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|
|


