கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட யாழ். மாநகரசபை குத்தகைக் கடை உரிமையாளர்களுக்கு இரண்டு மாத வாடகைச் சலுகை – ஈ.பி.டி.பியின் கோரிக்கை யாழ் மாநகர சபையால் நிறைவேற்றம்!

Wednesday, May 27th, 2020

கொரோனா   தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்ட நடைமுறையால் பாதிக்கப்பட்ட யாழ் மாநகரசபை ஆளுகைக்குட்பட்ட குத்தகைக் கடைத் தொகுதிகளின் உரிமையாளர்களது நிலைகருதி அவர்களுக்கு வாடகை அறிவீடு செய்வதில் சலுகை வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்த யோசனைக்கு யாழ் மாநகரசபை இன்றையதினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ் மாநகரசபையின் விஷேட கூட்டம் இன்றையதினம் சபையின் உதவி முதல்வர் ஈசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

நாட்டை அச்சுறுத்திய கொதேரானா தொற்றை அடுத்து இலங்கை முழுவதும் முடக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் இடக்கப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் யாழ் மாநகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட 210 கடைகளை குத்தகைகு பெற்றுக்கொண்ட கடைகளின் உரிமையாளர்கள் வியாபார நடவடிக்கைகள் இன்மையால் பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களின் பின்னர் மே 11 ஆம் திகதி சுகாதார தரப்பினரது ஆலோசரைனகளுக்க அமைய கட்டுப்பாடுகளுடன் நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகின்றது.

குத்தகைக் கடைகளிலிருந்து கிடைக்கும் நாளாந்த வருமானத்தை கொண்டே குறித்த கடை உரிமையாளர்கள் யாழ் மாநகர சபைக்கு மாதாந்த வாடகையை செலுத்தி வந்துள்ள நிலையில்  குறித்த 3 மாத காலப்பகுதியில் எதுவித வியாபார நடவடிக்கைகளும் இன்மையாபல் எதுவித பொருளாதார வருமான ஈட்லும் குறித்த குத்தகை கடை உரிமையாளர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு குறைந்தது 3 மாதங்களுக்கான வாடகையை அறவிடாது சலுகை கொ:டுத்து பரிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த கொரோனா தொற்று அபாயம் நீங்கும் வரை தொடர்ந்தும் அவர்களுக்கு அச்சலுகையை ஓரளவேனும் கொடுக்க வேண்டும் எனவும் கடந்த சபை அமர்வின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரபை உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து குறித்த சபையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதையடுத்து அதற்கான தீர்மானத்தை விஷேஸட கூட்டம் ஒன்று நடத்தி முடிவெடுப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றையதினம் குறித்த கடை உரிமையாளர்களுக்கு 2 மாதங்களுக்கு வாடகைச் சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்  அதன் பின்னரான கொரோன தாக்கம் முடியும்வரையான காலப்பகுதியில் 50 வீத சலுகையும் வழங்குவது தொடர்பில் கடைகளின் வியாபார நடவடிக்கைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: