இஸ்லாமிய பயங்கரவாதிகளே தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர் – அரசாங்கம் அறிவிப்பு!
Monday, April 22nd, 2019
இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களும் என்றும் அவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இலங்கையின் பல்வேறு பகுதியில் நேற்று நடத்திய தற்கொலை குண்டுத்தாக்குதலில் இதுவரை 290 உயிரிழந்ததுடன் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Related posts:
எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் முடிவு!
அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள் – மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்க...
விரைவில் நாகபட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...
|
|
|


