இவ்வாண்டின் இறுதிக்குள் 20 இலட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்கு – அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவிப்பு!

இந்த ஆண்டில், 20 இலட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை சுமார் 530 மில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டியுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 482.3 மில்லியனாக இருந்தது.
இந்தநிலையில் 2023ஆம் ஆண்டின் இறுதியில் சுற்றுலாத்துறையில், மொத்தம் 3 பில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜூலை மாதம் 13, திகதிமுதல் 16 ஆம் திகதி வரை தபால் மூல வாக்கு பதிவு நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு...
யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பயணத்தை மறக்கமாட்டேன் - இந்திய பிரதமர் புகழாரம்!
அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு 1.5 பில்லியன் ரூபா இலாபம் - மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு!
|
|