இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்கியது இந்தியா!
Wednesday, May 29th, 2019
இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து, இலங்கைக்கு செல்வதனை மறு அறிவித்தல் வரை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தன.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போது, இலங்கையில் 99 வீதம் பாதுகாப்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை தான் உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு பிரதமர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை இந்தியா தளர்த்திக் கொண்டுள்ளது.
Related posts:
|
|
|


