இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்பு!

Thursday, July 7th, 2022

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலிசார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கிவைத்துள்ளனர்..

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தமென நாடு முழுவதும் இயல்புநிலை முடங்கி வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலிஸ்துறை சார்பில் 01 கோடியே 34 இலட்சம் (இந்திய ரூபா) ரூபாவும் இந்திய போலிஸ் பணி அதிகாரிகள் சங்கம் சார்பில் 06 இலட்சத்து 63,000 ரூபாவுமென மொத்தம் 01 கோடியே 40 இலட்சம் ரூபா நிதி சேகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிதிக்கான காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக போலிஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: