இலங்கை கப்பல்கள் மீது சர்வதேச எல்லையில் தாக்குதல்!
Monday, June 24th, 2019
சர்வதேச கடலில் கடற்றொழிலுக்காக சென்ற 10 படகுகளுக்கு, கப்பல்கள் சிலவற்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை இயந்திர படகு உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச கடலில் மீன்கள் செறிந்து காணப்படும் பகுதியிலே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
செஹான், செனுர, சந்தலி, ஈசானி, ரான் குருல்லா, ஹிருனி 1 என்ற படகுகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சர்வதேச நாடுகளுக்கு சொந்தமான கப்பல்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Related posts:
யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத்திட்டம்!
கர்ப்பவதிகளுக்கு வழங்கப்படும் உலர் உணவுகள் சில தரமற்றவை!
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மீளவும் பாவனை செய்யக் கூடிய பைகளை கொண்டு வரும் வாடிக்கையாளர்களின் பற்றுச...
|
|
|


