கர்ப்பவதிகளுக்கு வழங்கப்படும் உலர் உணவுகள் சில தரமற்றவை!

Wednesday, May 15th, 2019

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கர்ப்ப வதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவுக்கான உலர் உணவுப் பொருட்களில் முட்டை, நெத்தலிக்கருவாடு ஆகிய பொருட்கள் பாவிக்க முடியாதவாறு பழுதடைந்து காணப்படுவதாகவும் இவற்றுக்கு பதிலாக பழுதடையாத பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.

கர்ப்பவதிகளின் நலன் கருதி அரசாங்கத்தினால் மாதாந்தம் 2000 ரூபா  பெறுமதியுள்ள அரிசி, கடலை, பருப்பு, உழுந்து, முட்டை, நெத்தலிக்கருவாடு உட்பட ஒன்பது உணவுப் பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

சில சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் இப் பொருட்களில் முட்டை, நெத்தலிக்கருவாடு ஆகியனவே பாவிக்க முடியாதவாறு பழுதடைந்து காணப்படுகின்றன.

Related posts: