இலங்கை கடற்படை சாதித்துள்ளது : அமெரிக்கா பாராட்டு !
Thursday, March 5th, 2020
சட்டவிரோத போதைவஸ்துக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை கடற்படை சாதித்துள்ளதாக அமெரிக்கா பாராட்டியுள்ளது.
தமது பங்களா நாடு ஒன்று அந்த நடவடிக்கையை மேற்கொண்டமை தொடர்பில் தாம் மகிழ்வதாக அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது.
தமது நாட்டினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சமுத்ரா மற்றும் கஜ்பாகு ஆகிய கப்பல்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் அவை இலங்கையின் இறைமைக்கு உதவியுள்ளன என்றும் அமெரிக்கா தூதரகம் குறிப்பிட்டுள்ளது
அண்மையில் கடற்பகுதியில் மீட்கப்பட்ட போதைவஸ்துக்களின் சந்தைப்பெறுமதி 600 கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சிறுவர் துஷ்பிரயோக சேவையை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்த நடவடிக்கை!
உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
இறக்குமதி கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும் - IMF உடன்படிக்கை நாளை நாடாளுமன்றுக்கு – ஜனாதிபதி ஜனா...
|
|
|


