இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டது – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
Monday, September 4th, 2023
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், இலங்கையின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடன் நெருக்கடி வளர்ந்து வரும் நாடுகள் உள்ளிட்ட பல உலக நாடுகளுக்க மிகுந்த கவலையளிக்கும் விடயமாக உள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் கடனில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவுவதற்காக உறுதியான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, ஜி20 மாநாட்டில் ஒருமித்த நிலைப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பாராட்டத்தக்க முடிவுகள் உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2477 சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் பணியாளர்கள் காவல்துறையில் இணைப்பு!
பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!
யாழ் மாவட்ட பாடசாலைகள் நாளையும், நாளை மறுதினமும் மூடப்படும்!
|
|
|
குடிநீர் சேவையை சீராக்க பவுசர், புனரமைப்பு பணிக்கு JCB இயந்திரம், அபிவிருத்திக்கு விஷேட நிதி - பிரதம...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் கண்பார்வை நோயினால் பாதிக்கப்பட்ட 29 பேருக்கு மூக்கக்கண்ணாடி...
நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை - பெட்ரோலிய கூட்ட...


