நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Wednesday, November 9th, 2022

நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமென தகவல் வெளியாகியிருந்தமையினால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேவையாக எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை

எரிபொருள் விலைச்சூத்திரன்படி கடந்த 5 ஆம் திகதி எரிபொருளின் விலைகள் குறையலாம் என்ற அச்சம் காரணமாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் அவற்றை கொள்வனவு செய்து விநியோகிப்பதில் காட்டிய தயக்கம் காட்டியிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளும் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், நுகர்வோருக்கு எரிபொருளை வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு பெட்ரோலியத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: