வெற்றிலைக்கேணி இந்துமயான வீதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீரமைப்பு!

Sunday, February 12th, 2017

வடமராட்சி கிழக்கு பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வெற்றிலைக்கேணி இந்து மயானப் பாதை ஈழ மக்கள் ஐனநாயக்கட்சியினரால் சீர் செய்யப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணி இந்து மயானத்துக்கென வீதி இல்லாமையால் பற்றைகாடுகளின் ஊடாகவே குறித்த பிரதேச மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் கறித்த மயானத்தை பயன்படுத்தி வந்தனர்.

மக்கள் தாம் எதிர்கொள்ளும் அசெளகரியங்களை ஈழ மக்கள் ஐனநாயக்கட்சியின் குறித்த பிரதேச நிர்வாகத்தினரிடம் விடுத்திருந்த கோரிக்கை அமைவாக செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு பருத்தித்துறை பரதேச நிர்வாக செயலாளர் விஜிந்தன் அவர்களால் கொண்டுசெல்லப்பட்டதற்கு அமைவாக கட்டைக்காடு வெற்றிலைக்கேணி இணைப்பு வீதியை முன்னிறுத்தி குறித்த இந்து மயானத்திற்கு சுமார் 2கி.மீ  தூரம் கொண்ட 25 அடி அகலப்பாதையாக சீர் செய்யப்பட்டுள்ளதன் மூலம் பிரச்சினைக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த இந்து மயானத்திற்கு சில வருடங்களுக்கு முன்னர் ஈழ மக்கள் ஐனநாயக் கட்சியின் பருத்தித்துறை பிரதேசசபையின்  எதிர்கட்சி தலைவராக  இருந்த ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் அவர்கள் கிணறு ஒன்றும்  அமைத்து கொடுத்திருந்தார் என  குறித்த பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

16735627_1319060148133069_1941779617_o

Related posts: