143 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!

Saturday, November 18th, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள தபாலகங்களில் நடாத்தப்படும் 143 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வுகள் இந்த முறை யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளன.

நாளை ஞாயிற்றுக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இந்த உலக அஞ்சல் தின நிகழ்வுகள் இடம்பெறும். வடக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபர் கே.கனகசுந்தரம் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் தபால்மா அதிபர் டி.எல்.பி.ஆர் அபயரெட்ன முதன்மை விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் கலந்து கொள்வார்.

நிகழ்வில் சிறந்த தபாலகங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றில் சித்தியடைந்த தபாலகப் பணிப்பாளர்களின் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கப்படும். அதே சமயம் கடந்த ஆண்டில் இடம்பெற்ற 142 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வுகள் முல்லைத்தீவில் இடம்பெற்றன.

 

Related posts:


கொரோனா தொற்று அதிகரிப்பின் எதிரொலி - இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை - சுகாதார பிரிவு நடவட...
அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் - ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அத...
நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பா...