அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Thursday, May 13th, 2021

இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் புகைப் பிடிக்காதபடி மக்களை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதற்கும் முன்வருமாறும் ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் ஷெனால் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கும், புகைப் பிடிப்பதைத் தடுப்பதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கடைகளையும் உடனடியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், இது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் உதவும். மக்கள் மதுபானங்களை வாங்குவதற்கும், புகைப் பிடிப்பதற்கும் அல்லது அவற்றை உட்கொள்வதற்கும் பல இடங்களில் ஒன்று கூடுவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் நடைபெறுகின்ற விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொண்டு அங்கே ஒன்றுகூடுவார்கள். இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: