40,000 மெட்ரிக் தொன் உரத்தை தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது – நாளைமுதல் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு அறிவிப்பு!

Saturday, July 9th, 2022

இந்திய கடனுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரத்தை தாங்கிய கப்பல் இன்று (9) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலில்  40,000 மெட்ரிக டன் உரம் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த யூரியா உர கையிருப்பு நாளை (10) முதல்  நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 3 ,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று நள்ளிரவு நாட்டை வந்தடைய உள்ளது.

அத்துடன், எதிர்வரும் 11 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில். 3,700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய 2 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மாதத்திற்குள் 30,000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அண்மையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் லிட்ரோ நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: