இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2 பில்லியன் டொலரை எட்டியது!

Monday, February 13th, 2023

ஜனவரியில் இலங்கை அந்நிய செலாவணி கையிருப்பு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

பல இறுக்கமான நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டு வருவாய் என்பனவற்றின் அடிப்படையில், இலங்கையின் அந்நிய செலாவணி நிலைமை, படிப்படியாக முன்னேற்றம் அடைந்துள்ளது.

புதுப்பிக்கப்பிட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் அந்திய செலாவணியின் இருப்பு 2 ஆயிரத்து 120 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

எனினும், அதில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இணையாக காணப்படும் சீனாவின் யுவாங்கை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த டிசம்பர் மாதத்தில் 1,898 மில்லியன் அமெரிக்க டொலராக நாட்டின் அந்திய செலாவணி கையிருப்பு காணப்பட்ட நிலையில், அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆண்டு பூஜ்ஜிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுவதுடன், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்தமை, சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சி என்பன மீண்டும் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்தமைக்கான பிரதான காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பாலியல் லஞ்சம் பெறுகிறாரா பேராசிரியர்? மணவர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் - இராஜாங்க அமைச்சர்...
நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய வடக்கு மாகாண ஆளுநர் -