நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய வடக்கு மாகாண ஆளுநர் –

Sunday, December 5th, 2021

யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் புதிதாக அமைக்கப்பட்டது.

அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருவதனால், அவர்கள் அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.  அதனால் புதிய பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.

அந்நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இன்றையதினம் தனது அலுவலகத்திற்கு இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து இருந்தார்.

குறித்த கூட்டத்தில், இ.போ.ச பிரதிநிதிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட மறுப்பு தெரிவித்தனர்.

அதனை அடுத்து ஆளுநர் ” மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. தனி நபர், குழுக்களின் சுயலாபத்திற்காக அதனை தேடுவாரற்று விட முடியாது” என கூறி நல்லதொரு முடிவாக எடுங்கள் என கூறி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

Related posts:

போலித் தேசியவாதிகளால் தமிழினம் வாழ்வியலில் மீட்சிபெற முடியா திருக்கின்றது - ஈ.பி.டி.பியின் காரைநகர் ...
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரை ஊடகத்துறை அமைச்சரால் வெளியீடு!
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் - நிலைப்பாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மிகவும் உறுதியாகவே உள்ளத...