நுகர்வோர் அதிகார சபை அதிரடிச் சோதனை- அபராதமாக இதுவரை 111 மில்லியன் வசூலிக்கப்பட்டதாக தகவல்!
Wednesday, February 1st, 2023
2022ஆம் ஆண்டு வியாபார நிலையங்களில் நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைய தொடரப்பட்ட வழக்குகளில் 111 மில்லியன் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 980 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் 13 ஆயிரத்து 389 வழக்குகள் நிறைவடைந்துள்ளதுடன் அதனூடாக இந்த அபராத தொகை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிஸ்கட், மருந்துகள், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவை தொடர்பில் கடந்த ஆண்டு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
2005 ஆம் ஆண்டுமுதல் இதுவரையில் நுகர்வோர் அதிகார சபை சுமார் 90 ஆயிரம் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
1 கோடியே 60 இலட்சம் பேர் இலத்திரனியல் அடையாள அட்டைக்கு தகுதி!
கொரோனாவுடன் இளைஞர் தப்பி ஓட்டம் - தீவிர தேடுதலில் பொலிஸார்!
சந்தேகநபர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கியது அமைச்சரவை!
|
|
|


