இலங்கை அனைத்து நாடுகளும் பாடமாக இருக்க வேண்டும்!
Tuesday, September 13th, 2016
இலங்கை மலேரியா அற்ற நாடாக முன்னேறியுள்ளமையை அனைத்து நாடுகளும் பாடமாக எடுத்துச் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மலேரியா வேலைத்திடத்தின் பெட்ரோ எல் அலோன்சோ தெரிவித்துள்ளார்.1940 ஆண்டு இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 1963 ஆம் ஆண்டு 17 மலேரியா நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கை மலேரியா நோயை கட்டுபடுத்தும் செயற்பாட்டில் வெற்றிக்கண்டுள்ளது. இதன் பயனாக மலேரியா அற்ற நாடாக இன்று தன்னை உலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது.
இதனை அனைத்து நாடுகளும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதா ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
Related posts:
தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் காவியமான முதலாவது பெண் போராளியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோத...
வவுனியாவில் 90 ஏக்கர் குடியேற்றம் செய்வதற்குரிய காணியினை விடுவிக்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் வன்னி ...
உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் –...
|
|
|


