உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 29th, 2021

மக்கள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின், எதிர்வரும் புத்தாண்டுக்குள் நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்று 742 பேருக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட் – 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 562, 520 ஆக உயர்வடைந்துள்ளது. அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 529, 662 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 18, 553 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்தது. இந்த மரணங்கள் நேற்றுமுன்தினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்படிருந்தது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14, 305 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: