தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் காவியமான முதலாவது பெண் போராளியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியுமான சோபாவின் நினைவு தினம் இன்று!

Monday, May 3rd, 2021

தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் களமுனையில் காவியமான முதலாவது பெண் போராளியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியுமான சோபாவின் நினைவு தினம் இன்றாகும்.

அந்தவகையில் தமிழின இனவிடுதலை போராட்டத்தில் களமாடி களமுனையில் மரணித்து, பெண்களாலும் எதுவும் சாதிக்க முடியும் என்று பெண்களுக்கு முகவரி கொடுத்து வீரகாவியமான முதலாவது ஈழத்து பெண் போராளி “சோபா” எனும் மதிவதனியின் 36 ஆவது நினைவு நாள் இன்று நினைவுகூரப்பட்டது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உடன்பிறந்த சகோதரியான சோபா இன்றைய தினத்தில் 1985 ஆம் ஆண்டு மே மாதம் காரைநகர் களமுனையில் காவியமானார்.

கள முனையில் வீர காவியமான சோபாவிற்கு நினைவுகூரும் அதேவேளை இதே தினத்தன்று குறித்த களமுனையில் காவியமான ஏனைய தோழர்களுக்கும் நாம் அகவணக்கம் செலுத்துகின்றோம்.

Related posts: