நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் இன்றி வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானம்!

Sunday, August 20th, 2023

நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் இன்றி வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீதித்துறை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவை தேவைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் விசேட சுற்றறிக்கையை அண்மையில் வெளியிட்டது. 

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு வடமாகாண சபை நிதியிலிருந்து உதவி வழங்கும் செயற்திட்டம் ஆர...
பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் ...
யாழில் மீண்டும் கொரோனா அபாயம் - தென்மராட்சியில் 16 நாள்களில் 04 மரணங்கள்; 118 பேர் பாதிப்பு – செவ்வா...