பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு!

Sunday, August 1st, 2021

அம்பாறை கலோயா தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான கரும்பு விவசாயத்துக்கு தேவையான அனைத்து இயற்கை உரங்களும் அந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் ஆண்டுக்கு 7500 மெட்ரிக் டன் இயற்கை உரத்தினை உற்பத்தி செய்யகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் கழிவுகள் நூறுவீதம் அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப் படுகின்றவையாக இருக்கின்றது.

மேலும் இதனை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு 25 கிலோ இயற்கை உரங்கள் 25 ரூபா வீதம் வழங்குகின்றனர்.

இயற்கை உரங்களுக்கு மேலதிகமாக கலோயா நிறுவனத்தினால் இயற்கை திரவ உரம், உயிரி உரம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உரங்களை பயன்படுத்தி கரும்பு சாகுபடி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எம். எம். டி. சூரத் பெரேரா கூறுகையில் – , “தற்பொழுது தனது நிறுவனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை உற்பத்தி செய்யப்பட்டாலும், இலங்கையின் தேசிய தேவைக்காக இயற்கை உரங்களின் உற்பத்தியை அதிகரிக்க எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இரசாயன உரங்கள், இரசாயன திரவங்கள் இல்லாமல் கரும்பு சாகுபடி செய்ய முடியாது என்ற பொய்யான பிரசாரத்துக்கு கலோயா பெருந்தோட்ட நிறுவனத்தின் பாரிய அளவிலான இந்த இயற்கை உர உற்பத்தித் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: