இலங்கையை நோக்கி படையெடுக்கும் ரஷ்யர்கள் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Monday, November 28th, 2022
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
முன்பதாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அடிமட்டத்திற்கு சென்றிருந்தது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு, மின்துண்டிப்பு மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கைக்கு செல்வது குறித்து வெளிநாடுகள் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தன.
இந்த நிலையில் தற்போது ஓரளவிற்கு நாடு சுமுக நிலைக்கு வருவதை அடுத்து மீண்டும் சுற்றுலாபயணிகளின் கவனம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.
அந்த வகையில் குளிர்காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 ஆம் திகதிமுதல் 22ஆம் திகதி வரை 41308 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் 10066 பேர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தவரையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
அக்காலப்பகுதியில் 7021 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள அதேவேளை பிரித்தானியாவில் இருந்து 3276 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாக்கது.
000
Related posts:
|
|
|


