உள்நாட்டு கைத்தொழிற்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளிப்பு!

Saturday, October 22nd, 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், உள்நாட்டு கைத்தொழிற் துறையை பாதுகாப்பதற்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

மாபிள்கள் உட்பட குளியலறை சாதனப் பொருட்கள்சார் தொழிற்றுறையினருடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இறக்குமதி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். தாம் அண்மையில் மாபிள்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையமொன்றுக்கு சென்ற போது, அங்கு விலை வெகுவாக அதிகரித்து காணப்பட்டதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் நுகர்வோரிடமிருந்து அநீதியான முறையில் பணத்தை ஈட்டுவதற்கு வர்த்தகர்கள் முனைவார்களாயின் அதுவும், தவறான விடயமாகும்.

தங்களது வர்த்தகத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

வரியை தளர்த்த வேண்டும் என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடாகும் எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளமை குறிர்ரிடத்தக்கது.

Related posts: