ஓமான் நாட்டுடன் 3.6 பில்லியன் டொலர் கடன் தொடர்பில் அடுத்த வாரம் ஒப்பந்தம் கைச்சாத்து : டீசலுக்கு 35, பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பு என்கின்றார் அமைச்சர் கம்மன்பில!

Wednesday, October 20th, 2021

3.6 பில்லியன் டொலர் கடனை ஓமானிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் 5 வருடத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில்  20 வருட காலத்திற்குள் மீண்டும் அக்கடனை செலுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உலகளாவில் எரிபொருள் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்..

தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் டீசலுக்கு 35 ரூபாய் மற்றும் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 18 ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு முன்வை...
ராஜபக்சக்கள் கூண்டோடு வீழ்ந்து விட்டார்கள் என்று எவரும் கனவு காணக்கூடாது - பஸில் தெரிவிப்பு!
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையில் சனத்தொகையில் வீழ்ச்சி - பதிவாளர் திணைக்களத்தின் புள்ளி விபரத்தகவ...