இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பம் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை மற்றுமொரு ஆரம்பமாக ஆக்கிக்கொள்ள முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் –
உலகை யதார்த்தபூர்வமாக நோக்குவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூருகின்ற நத்தார் பண்டிகையை, அன்பையும், மனித மாண்பையும், மனிதநேயத்தையும் மதிக்கும் ஒரு சமுதாயத்திற்கான புதியதோர் அடித்தளமாக ஆக்கிக்கொள்வோம்.
அது ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவித்து, சிறந்ததோர் சமுதாயத்தை உருவாக்க தன்னை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையிலான உண்மையான காலத்தின் தேவையாகும்.
வெறுப்பையும் குரோதத்தையும் ஒழித்து, மோதல்கள் தீர்க்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் உணவுப் பயிர்கள் செழித்து விளங்கும் சுபீட்சமானதொரு இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இந்த நத்தார் தினத்தை மற்றுமொரு ஆரம்பமாக ஆக்கிக்கொள்ள முடியும்.
அமைதி, சமாதானம், சமத்துவம் போன்ற அற்புதமான போதனைகளின் அடிப்படையில் ஏனையவர்களுக்கு உதவுவதன் மூலம் நத்தார் பண்டிகையை அர்த்தமிக்கதாக கழிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|