கொரோனா தொற்று: அடுத்த இரு வாரங்களில் இலங்கையின் நிலைமை என்ன?

Monday, April 13th, 2020

இலங்கையில் கொரோனா நோயாளிகளை அடையாளம் காணுவதற்காக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை விட இரண்டு மடங்கு மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட போதிலும், இன்னும் அடையாளம் காணப்படாத நோயாளிகள் எத்தனை பேர் சமூகத்திற்குள் இருப்பார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் யாருக்காவது நோய் அறிகுறிகள் காணப்பட்டால் மறைந்திருக்காமல் சுகாதார அதிகாரிகளிடம் அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ஒவ்வொருவரையும் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்கு அர்ப்பணிக்குமாறும் வைத்தியர் குறிப்பிட்ட அவர் இதுவரை மக்களிடம் கிடைத்த ஆதரவு காரணமாக வெற்றிகரமாக நடவடிக்கை மேற்கொள்ள முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டால் இலங்கை கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்படுத்திய உலகின் முதலாவது நாடாக இலங்கை மாறும் என பொரளை வைத்திய ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts: