சுயநலமின்றி மக்களுக்கு பணிபுரிய விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் – யாழ் மறைமாவட்ட ஆயர் வேண்டுகோள்!

Sunday, August 2nd, 2020

“தமது சொந்த நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளரைத் தெரிவு செய்யுங்கள்.”   என யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பைப் புறக்கணிக்காதீர்கள். கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவும் வேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும்.

நாட்டை அச்சுறுத்தும் கொரோனா தொற்றின் காரணமாக நடைமுறையிலுள்ள “சுகாதார அறிவுறுத்தற்படி முகக்கவசங்களை அணிந்து நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று சமூக இடைவெளியைப் பேணி வாக்களித்து விட்டு விரைவாக வீடுகளுக்குச் செல்லுங்கள்.

அந்தவகையில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை ஒவ்வொருவரும் எவரது தலையீடோ தூண்டுதலோ இன்றி சுயமாகவும் சுதந்திரமாகவும் எடுக்க வேண்டும். தமது நலன்களை புறம் தள்ளி நாட்டை நேசித்து மக்களுக்குப் பணிபுரிய விரும்பும் நேர்மையான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கள்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: