இலங்கையில் நாளொன்றுக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு – இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் தெரிவிப்பு!

இலங்கையில் நாளொன்றுக்கு 12 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் விமுக்தி பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பரிசோதனைகளுக்காக மார்பக சுயபரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், வருடந்தோறும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 900 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் விமுக்தி பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
யாழ். நகரப் பகுதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவடைந்தன உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் ...
மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|