கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவடைந்தன உயர்தரப் பரீட்சை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவிப்பு!

Friday, November 6th, 2020

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா நோய் தொற்றாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஐ.டி.எச் மருத்துவமனையிலும் சில தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பதாக கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் இன்றைய தினத்துடன் முடிவடைகின்றது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக 362, 824 பேர் பரீட்சைக்காக விண்ணப்பம் செய்திருந்ததுடன் 2, 648 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்பட்டன.

அத்துடன் கொரோனா நோய் தொற்று அபாயத்திற்கு மத்தியிலும் வெற்றிகரமாக பரீட்சைகளை நடத்த முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: