26 வருடங்களின் பின்னர் ‪கட்டுவன் சந்தி விப்பு!

Friday, July 8th, 2016

26 வருடங்களின் பின்பு நேற்று முதல் இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் சந்தி மக்களுடைய திறந்து விடப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து கட்டுவன் சந்திவரை செல்லும் சுமார் 600 மீற்றர் வரையான வீதியே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

வல்லை அராலி வீதியில் 600 மீற்றரும் வல்லை-கட்டுவன் –மல்லாகம் வீதியில் 300 மீற்றரும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் 201.3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களுடைய மீள்குடியேற்றத்துக்காக கையளிக்கப்பட்டது. இவ்வாறு கையளிக்கப்பட்ட பகுதிகளில் வல்லை-அராலி வீதியும் மக்களுடைய பாவணைக்காக திறந்து விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் உள்ள முகாம் காரணமாக இவ்வீதியை முழுமையாக விடுவதற்கு இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்திருந்ததுடன் இராணுவத்தினர் மக்களுடைய காணிகளை ஊடறுத்து மாற்று வீதி ஒன்றினை அமைத்தனர்.

இதையடுத்து அக்காணி உரிமையாளர்கள் அரச அதிகாரிகளுடனும் இராணுவத்தினருடனும் முரண்பாட்டனர். இந்நிலையில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினால் குறித்த வல்லை அராலி வீதியினை முழுமையாக விடுவிக்குமாறு கோரி இராணுவத்தினருக்கு கடிதம் ஒன்று கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வல்லை அராலி வீதி கட்டுவன் சந்திவரைக்குமாக சுமார் 600 மீற்றர் தூரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையிலிருந்து வல்லை அராலி வீதியூடாகசெல்பவர்கள் கட்டுவன் சந்திவரைக்கும் மட்டுமே பயணிக்க முடியும் அதேபோன்று அச்சுவேலியில் இருந்து வல்லை அராலி வீதியூடாக வருபவர்கள் ஒட்டகப்புலம் சிஸ்ரர் மடத்தடி வரைக்கும் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளினால் பொதுமக்கள் கட்டுவன் சந்திவரைக்கும் சென்று அங்கிருந்து குரும்பசிட்டி ஊடாக வயாவிளான் – பலாலி வீதியினை சென்றடைய முடியும்.

13612186_1129137260478454_5704432677923021803_n

13620933_1745518459057053_1818588101409380430_n

13615319_1745518645723701_7134561777532722446_n

13557675_1129137547145092_2370860795135493162_n

Related posts:

எல்லைக் கதவுகள் மூடப்பட்டன :சட்ட விரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை – அவுஸ்திரேலிய அறிவிப்பு!
நாட்டை பசுமை பொருளாதார சமூகமாக மாற்றுவதற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் உருவாக்...
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம்...