இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கும் அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம்!

Wednesday, June 5th, 2024

அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஊடாக ஜூலை மாத இறுதி அல்லது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் யுனைடெட்  பெற்றோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளடங்கலாக 50 இற்கும் மேற்பட்ட புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக அவுஸ்திரேலியாவின் யுனைடெட்  பெற்றோலியம் நிறுவனம் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: