குடாநாட்டில் களைகட்டியுள்ள கார்த்திகைத் தீபத் திருநாள்.!

Tuesday, December 13th, 2016

இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகின்ற கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு இன்று(13) குடாநாட்டின் பல பாகங்களிலும் சிட்டி வியாபாரம் களை கட்டியுள்ளது.

தமது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக மக்கள் சிட்டிகளை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். குடாநாட்டின் முக்கிய சந்தைகளிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் அமோகமாக இடம்பெற்று வருகின்றது. இந்தப் பகுதியில் சிட்டிகள் குவியல் குவியலாகக் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

ஒரு சிறிய சிட்டியின் விலை ஐந்து ரூபாவாகவும் பெரிய சிட்டியின் விலை ஏழு ரூபா முதல் பத்து ரூபா வரையும் விற்பனையாகி வருகிறது. இதனை விடக் களி மண்ணினால் செய்யப்பட்ட அலங்கார விளக்குகளும் இம் முறை புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விளக்கு 150 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: