இந்திய முட்டைக்கு எதிராக உள்ளூர் உற்பத்தியாளர்கள் சதி – அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Tuesday, October 17th, 2023

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுபவை என விளம்பரப்படுத்தி உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்க முட்டை உற்பத்தியாளர்கள் முயற்சித்து வருவதாக அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வலிசுந்தர தெரிவித்தள்ளார்.

இந்திய முட்டைகள் செயற்கையானவை அல்ல என்று சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்து உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய முட்டை ஒன்று சதொச நிறுவனத்தினால் 35 ரூபாவிற்கும், சுப்பர் மார்க்கெட்டில் 40 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர், உள்ளூர் முட்டை ஒன்று 43 ரூபாவிலிருந்து 48 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரச வணிக சட்டக் கூட்டுத்தாபனம் சுமார் 15 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாகவும், உள்ளூர் முட்டை விலையை கட்டுப்படுத்தாமல் உயர்த்தினால், இந்திய முட்டைகளின் இறக்குமதி அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: