இலங்கையில் கொரோனா தொற்றின் வீரியம் சடுதியாக உயர்வு: கடந்த மூன்று நாட்களில் 100 பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு !

Saturday, April 25th, 2020

இலங்கையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 100 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த 11 நாட்களில் மட்டும் 200 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் மருத்துவத் தரப்பினர் நேற்று மட்டும் இலங்கையில் 47 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 433 அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் மட்டும் 52 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பதுடன்ட இன்றையதினம் மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் 30 வயதுடைய உத்தியோகத்தர் ஒருவரே கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறுப்படுகின்றது.

அத்துடன் பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டடுள்ளது. அத்துடன்

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 420 பேரில் தற்போது 297 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணப்பட்டுள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: