யாழ்ப்பாணத்தில் பாரதியார் விழா!

Monday, January 29th, 2018

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பாரதியார் விழா சென்னை பாரதியார் சங்கத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான இரா.காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் முதன்மை விருந்தினராகவும் யாழ். இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை தமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்தியதுடன் சென்னை சரஸ்வதி பரதநாட்டிய வித்தியாலயஇயக்குநர் நர்த்தன சிரோண்மணி கிரிஜா முருகன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் கலைமாமணி சோபனா ரமேஷ் வழங்கிய பாரதி பாடல்களுக்கான பரத நாட்டியநிகழ்ச்சியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பாரதியார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, பலாலி ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன் ,கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர்செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகியோர் பாரதி பணிச் செல்வர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் வெ.இராசேந்திரன், பிரான்சைச் சேர்ந்த சாம் விஜய் ஆகிய தமிழார்வலர்களும் பாரதி பணிச்செல்வர் என்ற விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டனர்.

Related posts: