விபத்தில் மன்னார் நீதவான் படுகாயம்!

Wednesday, June 22nd, 2016
யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதியில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்ற விபத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை வீதியில் நீதவானின் வாகனம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காக மாடுகள் சென்ற நிலையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. இதன் போது காயமடைந்த நீதவானை உடனடியாக இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மன்னார் பொது வைத்தியசாiலின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் நீதவானின் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து குறித்த மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிக்மி சேவையால் ஆட்டம் கண்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் – புதனன்று கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்...
வரியை செலுத்த தவறிய ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து - கலால் திணைக்களம்...
மரக்கறிகளின் விலை உயர்வைத் தணிக்க வீட்டுத் தோட்டங்களைப் பராமரியுங்கள் - பொதுமக்களுக்கு விவசாய அமைச்ச...