பிக்மி சேவையால் ஆட்டம் கண்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் – புதனன்று கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு!

Monday, October 9th, 2023

யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

நாளைமறுதினம் புதன்கிழமை காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள வீதி வழியாக  வருகை தந்து இறுதியில் கடற்தொழில் அமைச்சரிடம்  மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

குறிப்பாக அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி  மூலம் முச்சக்கர வண்டி சேவையினை  மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த போராட்டமானது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்னெடுக்கப்படவுள்ளது

இதனிடையே பொருளாதார பாதிப்பு, வேலை இன்மை போன்ற பல்வேறு காரணங்களால் வறிய மக்ககள் நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரம்பரியம் என்று கூறி சேவை என்ற போர்வையில் தரிப்பிடங்களை வியாபார நோக்குடன் அமைத்து சேவையிலீடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் அதிகரித்ததும் வலுக்கட்டாயமானதுமான கட்டணங்களை பயணிகளிடம் அறவிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொதுநலன் விரும்பிகள் தற்போது அறிமுகமாகியுள்ள பிக்மி செயலியூடான முச்சக்கரவண்டி சேவை ஊடாக நம்பிக்கையானதும் நியாயமானதுமான கட்டணங்களை செலுத்தி தமக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடிவதாகவும் இந்த சேவை வருகையால் முச்சக்கரவண்டி என்ற மிகப்பெரும் மாபியா கும்பல் ஆட்டங்கண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருட்களின் விலை அதிகரித்தமையால் நாதாரணமாக 50 ரூபாவாக இருந்த கட்டணத்தை 500 ரூபா வரை சடுதியாக அதிகரித்தினர்.

ஆனாலும் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டதன் பின்னரும் அந்த கட்டணக் குறைப்பை அவர்கள்  செய்யவில்லை. இதனால் வறிய மக்கள் அவசர தேவைக்க கூட முச்சக்கரவண்டியூடான சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருந்தது.

அதுமட்டுமல்லாது 500 மீற்றர் தூரம் செல்ல வேண்டுமானாலும் குறைந்தது 500 ரூபா அறவிடுவதாகவும் இரவு நேங்களில் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு யாழ் நகரிலிருந்து 2500 முதல் 3000 ரூபா வரை அறவிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பொதுநலன் விரும்பிகள் இவற்றை தற்போது அறிமுகமாகியுள்ள பிக்மி செயலியு}டான சேவை தவுடுபொடியாக்கியுள்ளதுடன் மக்களுக்கு மலிவான விலையில் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் இந்த பிக்மி சேவை போன்று ஏனைய துறைகளிலும் மாற்றீடுகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: