இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் 187 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

Thursday, August 11th, 2016

இலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றம் கூடிய போது, கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர் ஜயந்த சமரவிர எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய அமைச்சர் கயந்த கருனாத்திலக இதனை தெரிவித்துள்ளார்..

சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதி அமைச்சரினால் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதிபதிகள் இருவரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய 2015-ஆம் ஆண்டு 117 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் கருனாத்திலக, 2016-ஆம் ஆண்டில் இதுவரை 70 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: