இலங்கையில் இதுவரை கொரோனா நோய் தொற்றாளர்களை அடையாளம் காண 80 ஆயிரத்து 302 PCR பரிசோதனைகள் முன்னெடுப்’பு – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, June 11th, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்களில் எட்டு பேர் கடற்படையினர் எனவும், ஏனைய இருவரில் ஒருவர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர் எனவும், மற்றும் ஒருவர் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

சுகாதார துறையால் வெளியிட்டப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 736 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரத்து 122 பேர் நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் நோய்த்தொற்று இனங்காணப்பட்ட நாள்முதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோய் தொற்றாளர்களை அடையாளம் காண 80 ஆயிரத்து 302 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது வரையில் இலங்கையில் 11 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: