இலங்கை மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டும் – ஐ.நா!

Saturday, December 16th, 2017

தன்னிச்சையான தடுத்து வைப்புக்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இலங்கை உடனடியாக மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குழு கடந்த 4ஆம் திகதிமுதல் இன்றுவரை இலங்கையில் தமது அவதானிப்புக்களை மேற்கொண்டது

குறித்த காலப்பகுதியில், கொழும்பு, நீர்கொழும்பு, திருகோணமலை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய பிரதேசங்களுக்கு இந்த குழு பயணம் மேற்கொண்டது

அங்கு ஆட்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும், 30இற்கும் மேற்பட்ட அமைவிடங்களுக்கு சென்று, சுதந்திரம் இழக்கச் செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் அதிகமானோருடன் கலந்துரையாடியுள்ளது

இந்தக் குழுவில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஹோயே அன்ரானியோ குவேரா பர்மூடாஸ், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த லீ டொமே மற்றும் லெட்வியா நாட்டைச் சேர்ந்த எலினா ஸ்ட்டீனர்ட் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இந்தக் குழு, தமது அவதானிப்புகள் குறித்து, இன்றைய தினம் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தது

Related posts: