இலங்கையில் ஆரம்பிக்கப்படும் மேலும் 2 விமான சேவைகள் – கிடைத்தது அமைச்சரவை அனுமதி!
Tuesday, May 30th, 2023
இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் Arkia ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால், இதற்கு முன்னர் இலங்கையில் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆர்க்கியா எயார்லைன்ஸ் இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேலில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
இலங்கை மறுசீரமைப்புகளை முன்னெடுக்க வேண்டும் - ஐ.நா!
தபால் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் - தேர்ல் ஆணைக்குழு!
72 பில்லியன் வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் - உத்தியோகப்பூர்வ வங்கிகளை மாத்திரம் பயன்படுத்த...
|
|
|


