இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தாக்கம் – ஒரே நாளில் 63 பேருக்கு தொற்று உறிதிப்படுத்தப்பட்டது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றையதினம் மட்டும் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் ஒரே நாளில் பதவாகிய அதிகமான நோயாளிகளின் எண்ணிக்கை இதுவென தொற்று நோயியல் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கொரொனா தொற்றுக்குள்ளான 120 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 396 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள தொற்று நோயியல் பிரிவு இதுவரை இலங்கையில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Related posts:
மீனவர்களுக்கான சலுகைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு புதிய தீர்மானம்!
அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள்ம...
வகுப்பறையில் ஒரு மாணவனிடம் இருந்து மற்றுமொரு மாணவனுக்கு கொரோனா பரவும் அபாயம் மிகவும் குறைவு - லேடி ...
|
|