அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள்முதல் மீள ஆரம்பம் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, November 16th, 2021

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம்முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதனடிப்படையில் அரச பாடசாலைகளின் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை

கல்வி பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலுக்கமைய குறித்த வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்பதாக 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு மேலதிக வகுப்புக்களை நடத்த புதிய வழிகாட்டலில்  அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன் சுகாதார வழிகாட்டிக்கு அமைய தேர்வுகளை நடத்தவும், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த வகுப்புகளின் மேலதிக கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தரம் 06 முதல் 09 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Related posts:


நிபுணர்கள் குழுவின் தீர்மானத்தை சகலரும் ஏற்க வேண்டும் - கொரோனாவால் மரணமாகும் நபர்கள் விவகாரம் தொடர்ப...
நாட்டில் வேலையின்மை வீதம் முதல் காலாண்டில் 4.3 வீதமாக குறைந்தது - சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணை...
ஓய்வுபெறும் அரச அதிகாரிகள் இனி வாகனங்களை கொண்டு செல்லமுடியாது - அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு...