நுளம்புக்கடிக்கு அதிகம் ஆளாகுவது மது அருந்துபவர்கள் – ஆய்வில் தகவல்!

Tuesday, April 9th, 2019

மதுபானம் அருந்தும் ஒருவர் நுளம்புக்கடிக்கு உள்ளாவது ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்கள் மூச்சு விடும்போது வெளியிடும் கார்பன்-டயோக்சைட் ஒக்டோன் ஆகியவற்றை முதலாக கொண்டே நுளம்புகள் ஒருவரை கண்டறிந்து கடிக்கின்றன.

மது அருந்தியவரை கடிப்பதால் கொசுவின் செயற்பாட்டில் மாற்றங்கள் நிகழாத நிலையில் அதிகளவு சகிப்புத்தன்மையை கொண்டிருக்கும் சில வண்டினங்கள், மதுபானம் கலந்த திரவத்தை குடித்தவுடன், மிகுந்த உற்சாகத்தை அடைகின்றன எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதுபானத்தை தவிர்த்து ‘ஏ’ இரத்த வகையை கொண்டிருப்பவரைவிட, ‘ஓ’ இரத்த வகை கொண்டிருப்பவர்கள் நுளம்புக்கடிக்கு முகங்கொடுக்கும் வீதம் இரண்டு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிக உடல் வெப்பத்தை கொண்டிருப்பவர்கள், கர்ப்பமாக உள்ளவர்கள், அதிகளவு கார்பன்-டயோக்ஸைட் வெளியிடுபவர்கள் ஆகியோரை நுளம்புகள் அதிகளவில் கடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related posts: