மீனவர்களுக்கான சலுகைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு புதிய தீர்மானம்!

Friday, December 2nd, 2016

மீனவர்களுக்கான புதிய சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .

இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக இலங்கை மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கான 3 வகையான விசேட சட்டங்களை தாம் தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத மீன்பிடி, மீனவர்கள் மீதான தடை உத்தரவு ,முறைப்படுத்தப்படாத மீன்பிடி முறைகள் என்பன தொடர்பில் புதிய வகையிலான சட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் குறித்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீனவர்களுக்கு புதிய வகையிலான மீன்பிடி சாதனங்களை வழங்குதல் தொழிநுட்ப சக்தி வாய்ந்த டெப் லெட்களை மீனவர்களுக்கு வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் விரைவில் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

mahinda-amaraweera_mini

Related posts: