இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : யாழ்ப்பாணத்தில் நேற்று பதிவு இல்ல!

Monday, April 6th, 2020

கொரோனா தொற்று தொடர்பாக நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் எவருக்கும் குறித்த நோய் இருப்பது பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை வைத்தியசாலைக்கு வெளியே அரியாலை, கொழும்புத்துறை, குருநகர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 12 பேருக்கும் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட 12 பேரும் குறித்த அரியாலை போதகரருடன் நெருங்கிய தொடர்பை பேணியதனால் இவர்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதி...
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவதற்கான தேவை இதுவரை ஏற்படவில்லை - நிதி இராஜாங்க அ...
10 பில்லியன் ஒதுக்கீட்டில் இம்முறை 66,000 மெ.தொ. நெல் கொள்வனவு - அமைச்சரவைக்கும் நிதி அமைச்சு பத்திர...